Enga Veettu Mappillai 2
எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2-க்கு யாரை அனுப்பலாம் என கேட்க அதற்கு சாயீஷா பதில் கூறியுள்ளார்.

Enga Veettu Mappillai Seasan 2 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார். இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தற்போது இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தென்னிந்திய சினிமாவில் நன்றாக டான்ஸ் ஆடும் நடிகை என்ற விருதை வாங்கியுள்ளார் சாயீஷா.

விருது வாங்கிய இவரிடம் கலர்ஸ் தமிழில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2 ஒளிபரப்பானால் அதில் எந்த நடிகரை அனுப்பலாம் என கேட்க சாயீஷா ரசிகர்களிடம் கேட்க பலரும் சிம்பு என கோஷமிட்டனர்.

இதனையடுத்து சாயீஷாவும் சிம்புவின் பெயரையே பரிந்துரை செய்துள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை 2-ல் சிம்பு பங்கேற்ற எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.