Enemy Movie Review

விஷால் மற்றும் ஆரியா ஆகியோர் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Enemy Movie Review : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. இவர்கள் இருவரையும் ஒன்றாக இணைத்து ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் தான் எனிமி. வினோத் என்பவர் படத்தை தயாரிக்க தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தடுப்பூசி போடாத ஊழியர்கள் 800 பேர் சஸ்பெண்ட் : நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

படத்தின் கதைக்களம் :

சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருபவர்கள் ஆர்யா மற்றும் விஷால். விஷால் தம்பி ராமைய்யாவின் மகன். ஆர்யா பிரகாஷ்ராஜின் மகன். போலீஸ் அதிகாரியாக இருக்கும் பிரகாஷ்ராஜ் தன்னுடைய மகனுக்கு பயிற்சி கொடுக்கிறார். திடீரென இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

பிரகாஷ்ராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா இருவரும் பிரிகின்றனர். விஷால் சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது அமைச்சர் ஒருவரை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக விஷாலுக்கு தெரியவர இதனை தடுக்க அவர் முயற்சி செய்கிறார். கடைசியில் இந்தத் திட்டத்தைத் தீட்டியது ஆர்யாதான் என தெரியவருகிறது. இருவருக்கும் இடையில் பிறகு என்ன நடந்தது? இருவரும் கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்தது இல்ல – Annaatthe படம் பார்த்து கண்கலங்கிய மக்கள்! | HD

படத்தை பற்றிய அலசல் :

விஷால் மற்றும் ஆர்யா என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருவருக்குமிடையேயான ஆக்ஷன் காட்சிகள் திரையரங்குகளை தெறிக்க வைக்கின்றன.

நாயகியாக நடித்துள்ள மிருளாயிணி அழகான நடிப்பை கொடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த நடிகர்களான பிரகாஷ் ராஜ் தம்பி ராமையா என இருவரும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எஸ்.எஸ் தமன் இசை படத்திற்கு பெரும் பலம். ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

ஆனந்த் ஷங்கர் ஆர்யா மற்றும் விஷால் என இருவரையும் வைத்து கிரைம் திரில்லர் கதையை மாஸாக இயக்கியுள்ளார். ஆக்சன், எமோஷன் என அனைத்திற்கும் இடம் கொடுத்துள்ளார்..

REVIEW OVERVIEW
எனிமி விமர்சனம்
enemy-movie-reviewமொத்தத்தில் எனிமி ஆர்யா மற்றும் விஷால் ரசிகர்களுக்கு செம்ம விருந்து