எட்டு வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியல் இன்று முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் என்னதான் போட்டி போட்டு சீரியல்களை களமிறக்கி வந்தாலும் டிஆர்பியில் சன் டிவி சீரியல்களை அடித்துக் கொள்ள இன்னும் ஆள் இல்லை என்றே சொல்லலாம்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.. வெளியான ஷாக்கிங் தகவல்

அப்படி கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வரை நேரத்தில் கூட மாற்றம் செய்யாமல் எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சந்திரலேகா. தற்போது இந்த சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து வருகிறது.

எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. இந்த சீரியலுக்கு பதிலாக விரைவில் புதிய சூப்பரான கதைகளைத்துடன் கூடிய சீரியலை சன் டிவி களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.. வெளியான ஷாக்கிங் தகவல்

நீண்ட வருடங்கள் ஓடிய தொடர் என்ற பெருமையை இந்த சந்திரலேகா தொடர் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.