விஜய் டிவி சீரியல்களில் ஒன்று முடிவுக்கு வருவதாக தகவல் வெளியானது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.
End Card to Velaikaran Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்படியான சீரியல்கள் ஒன்றுதான் வேலைக்காரன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த சீரியல் தொடங்கிய நிலையில் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிஆர்பி-யில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லாத காரணத்தினால் இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது.