பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிக்கு பாச கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகள் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அனைவரும் ஒன்று சேர்ந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த சீரியல் கிட்டத்தட்ட நினைவு பகுதியை நெருங்கி விட்டதாம். ஜூன் மாதத்தில் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கெட் புதிய சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. ராதிகாவின் தயாரிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் தான் வெங்கட் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த சீரியலில் பூவே பூச்சூடவா ரேஷ்மாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்க ஒப்பந்தமாக இருந்த நிலையில் திடீரென அவரை இந்த சீரியலில் இருந்து தூக்கி விட்டனர். இதனை சஞ்சீவ் உறுதி செய்திருந்த நிலையில் தான் தற்போது அவருக்கு பதிலாக வெங்கட் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ‌‌

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததும் இந்த கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.