பாரதிகண்ணம்மா மட்டுமல்லாமல் வேறு ஒரு பிரபல சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கலைக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாரதி கண்ணம்மா வெகு விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து வேறொரு சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆமாம் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் தான் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. டிஆர்பி-ல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால் இந்த சீரியலை முடித்து வைக்க விஜய் டிவி முடிவெடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இறுதி அத்தியாயத்தை நோக்கி என பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ப்ரோமோ வீடியோ வெளியானது போல ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கும் ப்ரோமோ வீடியோவை எதிர்பார்க்கலாம்.