பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு சன் நெட்வொர்க் மூடுவிழா நடத்த உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் நெட்வொர்க்கின் கீழ் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. நேற்று கூட விஜய் தொலைக்காட்சி நிறுவனம் விஜய் டக்கர் என்ற பெயரில் புதிய சானலை தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் தற்போது சன் நெட்வொர்க் நிறுவனம் சில தொலைக்காட்சி சேனல்களுக்கு மூடுவிழா நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சுட்டி டிவிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு குறைந்து கொண்டே வருவதால் இந்த தொலைக்காட்சி சேனலுக்கு சன் டிவி மூடு விழா நடத்த இருப்பதாக தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதே போன்று குச்சி டிவி, குஷி டிவி, சுண்டு டிவி போன்ற சேனல்களின் ஒளிபரப்பையும் நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.