எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிரபல சன் டிவி சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படி மதியம் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த சீரியல் எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.. வெளியான ஷாக் தகவல்

சந்திரா மற்றும் லேகா என இருவரும் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகளே கிட்டத்தட்ட சில வருடங்கள் ஒளிபரப்பாகின. பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது முடிவை நெருங்கியுள்ளது.

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.. வெளியான ஷாக் தகவல்

விரைவில் இந்த சீரியல் முழுவதுமாக முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீரியல் முடிவடைந்ததும் அதற்கு பதிலாக ஆனந்த ராகம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனந்த ராகம் சீரியல் ப்ரோமோ வீடியோவையும் சமீப நாட்களாக நீங்கள் அடிக்கடி சன் டிவியில் பார்த்திருக்கலாம்.