Enai Noki Paayum Thota release postponed again
Enai Noki Paayum Thota release postponed again

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் இன்று வெளியாகவில்லை.

Enai Noki Paayum Thota release postponed again – கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இப்படம் முடிவடைந்துவிட்டது. ஆனால், பணப்பிரச்சனை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய் வந்தது. இறுதியாக இப்படம் செப்டம்பர் 6ம் தேதி அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படம் இன்றும் வெளியாகவில்லை.

நிறுத்தப்பட்ட கே.ஜி.எஃப் 2 படப்பிடிப்பு – படக்குழு எடுத்த அதிரடி முடிவு

இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்து இப்படத்தின் தயாரிப்பாளர் மதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரும் முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இயக்குநரான எனை நோக்கி பாயும் தோட்டா பிரபலம் – ஆனால் படம் மட்டும் இன்னும் வரல!

இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை! இதில் ஏற்படும் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும் விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். உங்கள் கருத்துக்களை கணக்கில் கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே

இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வேறு ஒரு தேதியில் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.