Emotional Message from Megna Raj

கணவனை இழந்த மேக்னா ராஜ்க்கு ஏற்பட்ட அடுத்த இழப்பு ரசிகர்களை சோகம் அடையச் செய்துள்ளது.

Emotional Message from Megna Raj : தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மேக்னா ராஜ். கன்னட சினிமாவில் பிரபல நடிகரான சிரஞ்சீவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சில வருடங்களில் மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி உயிரிழந்தார். சிரஞ்சீவி மரணத்தின் போது வயிற்றில் மூன்று மாத குழந்தை சுமந்து கொண்டிருந்தார் சிரஞ்சீவி. சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ‌

இந்த நிலையில் தற்போது மேக்னா ராஜ் வளர்த்து வந்த செல்ல நாய் இறந்து உள்ளது. இதுகுறித்த சோகமான பதிவை பதிவிட்டுள்ள மேக்னா ராஜ் சிரஞ்சீவியுடன் இருப்பாய் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேக்னா ராஜ் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.