Emergency numbers
Emergency numbers

Emergency numbers – பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க மாநில மகளிர் ஆணையம் தொலைபேசி எங்களை வழங்கியுள்ளது.,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிகள், பள்ளி பெண்கள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து தற்போது அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள்,திரை நட்சத்திரங்கள் முதல் நாடெங்கும் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மிருகத்தனமான குற்றவாளிகளிடம் இருந்து பாதிக்கபட்ட பெண்கள் தங்கள் புகாரை அளிக்க மாநில மகளிர் ஆணையம் தொலைபேசி எங்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில் 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பெண்கள் தங்கள் கருத்துக்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் சில கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here