கொலை மிரட்டல் புகாரால் வடிவேலு மீது போலீசார் வழக்கு பதிய அவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் வடிவேலு சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்னொரு பிரச்சனையாக நடிகர் வடிவேலு, தம்பி மணிகண்டன் மற்றும் இரண்டு பேர் மீது எலி படத்தின் தயாரிப்பாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை கே புதூர் போலீஸ் ஸ்டேஷனலில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் இவர்கள் நால்வர் மீதும் ஜாமினில் வெளிவராதபடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வடிவேலுக்கு சிக்கல் மேல் சிக்கலாக வந்து கொண்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Eli