Election officer
Election officer

Election officer – சென்னை: சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி மற்றும் நாகர்கோவில் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் விதி மீறல் ஆகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கருத்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் வந்தார்.

நேற்று காலை சென்னை வந்த ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர், நாகர்கோவிலில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியில் பேசியபோது, ‘2019 தேர்தல் தமிழகத்திற்கு உரிமைக்கான தேர்தலாக இருக்கும் எனவும், இப்போது தமிழகத்தை ஆள்பவர்களை மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு பின்புறமாக இருந்து இயக்குவதை பார்க்கிறோம் என்று கூறினார்.

மோடி குறித்து பேசுகையில், பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மையை நிர்மூலமாக்கிக் கொண்டு இருக்கிறார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்று கூறினார்.

இந்நிலையில், கல்லூரி நிகழ்ச்சி மற்றும் நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயல் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள 5 கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில், ராகுல் கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு தேர்தலுக்கு முன்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கருத்து தெரிவித்துள்ளதை,

தமிழக அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துமா!! என சலசலப்பு ஏற்பட்டுள்ளது.