Election Fly Force officers
Election Fly Force officers

Election Fly Force officers :

தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ரூ.3½ கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருகிற 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் சோதனை நடத்தபட்ட போது, பஸ்சில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் இருந்தது.

அந்த பைகளை அதிகாரிகள் எடுத்து திறந்து பார்த்தபோது, அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.

பஸ்சில் இருந்தவர்களிடம், அந்த பணம் யாருடையது? என்று அதிகாரிகள் கேட்டபோது, தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர்.

பின்னர் அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பைகளில் இருந்த பணம் முழுவதையும் கணகிட்டபோது, மொத்தம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 இருந்தது தெரியவந்தது. அந்த பணம் தற்போது அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அரசு பஸ்சில் சுமார் ரூ.3½ கோடி ரூபாய் பணம் சிக்கிய சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.