Election Date fixed at Vellore : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Election Date For Vellore

Election Date fixed at Vellore :

சென்னை: பணப்பட்டுவாடா புகாரால் வேலூரில் நிருத்திவைக்கபட்ட தேர்தல் தற்சமயம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜுலை 20-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜுலை 30-ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் வேலூர் தேர்தல் தேதி தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

மேலும் அதற்கான வேட்புமனுதாக்கல் வருகிற 11 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது அறிந்ததே.

வேலூர் மக்களவைதொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மீதமுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே மாதம் எண்ணப்பட்டு, இதில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில், பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் வருகிற 11ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும் என்றும், மனுக்கள் மீது 19ம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் வேட்புமனுக்களை வரும் 22- ஆம் தேதி மாலை வரை வாபஸ் வாங்கலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும், ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜுலை 19-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.