Election Commission Raid
Election Commission Raid

Election Commission Raid – திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளும் நேற்று அமலுக்கு வந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாகனத் தணிக்கையில் இறங்கியுள்ளது.

எனவே தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் கானூர் என்ற இடத்தில் ரூ. 50 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் ரூ. 20 லட்சம் பறிமுதலாகியுள்ளது.

நெல்லை மாவட்ட ஆலங்குளம் அருகே சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோமதி சங்கரநாராயணன் தலைமையில் பறக்கும் படை வாகன சோதனைநடத்தினர்.

அப்போது சோதனையின் போது ஒரு இனோவா கார் வந்துள்ளது. அதனை முழுமையாக சோதனையிட்டதில் ‘காரிலிருந்து19 இலட்சத்து 94ஆயிரத்தி 500 ரூபாய் கணக்கில் வராத பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியை சேர்ந்த சங்கரிடம் நடத்திய விசாரணையில் பணம் கொண்டு செல்வதற்க்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததைத்தொடர்ந்து 19 இலட்சத்து 94ஆயிரத்தி 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது’

மேலும் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மேலும் சில இடங்களிலும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’.