Election Commission
Election Commission

Election Commission : டெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது வருமான வரித்துறை சோதனை நடத்தினால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

என மத்திய அரசுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்பும் மத்திய பிரதேசத்தில் நேற்றும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமானவரித்துறை உள்ளிட்ட சில அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ரஜினி, கமல் படங்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முழு விவரம் உள்ளே!

வருவாய்த்துறையின் நிர்வாக பிரிவாக இயங்கும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவை நிதி தொடர்பான குற்ற நடவடிக்கைகளை விசாரணை மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மத்திய வருவாய் செயலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, “தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க துறை பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது” .

மேலும் தேர்தல் வரவிருக்கும் இவ்வேளையில், கருப்புப்பணம் பயன்படுத்தப்படுவதாக யார்மீதேனும் சந்தேகம் எழும் பட்சத்தில் அது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.