Election Commission
Election Commission

Election Commission  :

தேனி:தேனியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் சாலிமரத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் தேனி- மூணார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் தேனி மாவட்டம் போடி தொகுதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடையது என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு தேனி- மூணார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட தனாள் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அந்த மக்கள் மலைப் பகுதியில் குடியேறப் போவதாக பெட்டிப் படுக்கையுடன் ஊரை விட்டு வெளியேறுவதாகக் கூறி சாலையில் மறியல் செய்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், போக்குவரத்து வசதி, மயானம், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அங்கு இல்லை என அங்கு வாழும் மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் சுகாதார கேடால் அங்குள்ள குழந்தைகள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இதுகுறித்து பல புகார் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.