Election Commission
Election Commission

Election Commission – டெல்லி: இரட்டை இலை சின்னம் அதிமுககா? அல்லது டிடிவி தினகரனுக்கா? யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் இன்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. ஒன்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. மற்றொரு தரப்பாக, சசிகலா – டிடிவி தினகரன் தரப்பு பிரிந்தது.

இந்நிலையில், சசிகலா – தினகரன், மற்றும் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இரு பிரிவும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை 2017 மார்ச் மாதம் முடக்கியது.

எனவே தற்காலிகமாக தினகரன் கட்சிக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மின்கம்பம் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது.

மேலும் 2017 நவம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், தினகரன் மீண்டும் இரட்டை இலை சின்னம் கேட்டு டெல்லி ஹைகோர்ட் சென்றார்.

மேலும் இதன் மீதான விசாரணை கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்றது. இந்நிலையில் தினகரன் தொடுத்த வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இடையில் குக்கர் சின்னம் வைத்து தினகரன் ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.