Egg Gravy :
 Egg Gravy :

 Egg Gravy :

முட்டையில் பல எளிய உணவு குறிப்புகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த முட்டை கிரேவி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று முட்டை அதில் கிரேவி செய்து என்றால் யார் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லுவார்கள்.

தேவையான பொருட்கள் :
முட்டை – 2
வெங்காயம் – 2
மிளகாய் – 5
எண்ணெய், உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் அரைத்து வைத்துள்ள மசியலை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை வதக்க வேண்டும். சற்று அதிகமாகவே எண்ணெய் சேர்த்து கொள்ளுவது நல்லது.

மசாலா வதங்க வதங்க எண்ணெய் இருந்தால் மட்டுமே சுவை நன்றாக இருக்கும்.

பிறகு, மற்றொரு பாத்திரதில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கி வதங்கி கொண்டு இருக்கும் மசியலில் போட்டு, நன்றாக மசாலா முட்டையில் கலக்கும் வரை கலரி விட வேண்டும். பிறகு கொத்தமல்லி போட்டு இறக்கினால் சுவையான முட்டை கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here