Eeswarwn Movie Theatrical Rights

சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக ஈஸ்வரன் பட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Eeswarwn Movie Theatrical Rights : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

பல்வேறு சர்ச்சைகளை தாண்டி சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படியான நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க ரிலீஸ் உரிமையை 7G பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை 2021 பொங்கல் ரிலீஸாகவோ அல்லது சிம்பு பிறந்தநாளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.