OTT-யில் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Eeshwaran Release in OTT Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு முன்னதாக நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் என்ற படம் வெளியானது. இதனை சுசீந்திரன் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதாவது வரும் ஜூன் 12-ம் தேதி இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.