Eeshwaran Movie Audio Update

ஜனவரி 2ல் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருப்பதாக ஈஸ்வரன் படக்குழு அறிவித்துள்ளது.

Eeshwaran Movie Audio Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகியிருந்த நிலையில் அடுத்ததாக வரும் ஜனவரி 2ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியானதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.