Eeshwaran Movie Audio Launch Update

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Eeshwaran Movie Audio Launch Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா நிதி அகர்வால் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்திருந்தது.

இதனையடுத்து தற்போது ஜனவரி இரண்டாம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என படக்குழு உறுதி செய்துள்ளது.

ஈஸ்வரன் பட இசை வெளியீட்டு விழா சிம்பு ரசிகர்களுக்கு ஒரு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிம்பு இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.