Eeshwaran Censored With U Certificate

ஈஸ்வரன் படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு.

Eeshwaran Censored With U Certificate : தமிழ் சினிமாவில பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

பொங்கல் விருந்தாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் சென்சார் முடிந்து யு சான்றிதழ் கிடைத்திருப்பதாக தகவலும் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 5 நிமிடங்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இனிய பொங்கலில் வெளியாக உள்ள தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் என்பதும் படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.