Eeramana Rojave Pavithra Babyshower Function

ஒரு சீரியலுக்காக விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் மொத்தமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

Eeramana Rojave Pavithra Babyshower Function : தமிழ் சின்னத்திரையில் புத்தம் புதிய வடிவில் சீரியல்களை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. சீரியல் ஒளிபரப்பில் வித்தியாசமான நுணுக்கங்களை கடைப்பிடித்து வருவதில் நம்பர் ஒன் சேனலாக இருந்து வருகிறது.

இந்த தொலைக்காட்சி சேனலில் ஒரு சீரியலில் திருமணம் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் அனைத்து விஜய் டிவி பிரபலங்களும் பங்கேற்பது போல காட்சிகள் மாற்றி அமைக்கப்படுவதை வழக்கமான ஒன்றுதான். ‌‌

அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சீரியலில் வளைகாப்புக்காக விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அது வேறு எந்த சீரியலும் இல்லை ஈரமான ரோஜாவே தான். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் பவித்ரா தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து விஜய் டிவி பிரபலங்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதுகுறித்த கலக்கலான ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.