YouTube video

Edappadi PalaniSwami Thanking Statement : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பத்து வருடங்களாக தமிழகத்தை அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.

அடுத்த வருடம் அதாவது 2021ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான பதில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதாவது 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது.

Edapadi K Palaniswamy

விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் முதல்வராகி இது தமிழகத்திற்கு நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் இதனால் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அனைவர் மத்தியிலும் கூடியுள்ளது. இதன் காரணமாக இன்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக குருதியிலேயே உறுதிகொண்டு உழைப்போம்.. புனித ஜார்ஜ் கோட்டையின் புதிய வரலாறு படைப்போம்.

அதாவது அடுத்த முறை சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும், அதற்காக அனைவரும் உறுதி கொண்டு உழைக்க வேண்டும் என தொண்டர்களிடம் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.