Edappadi Palaniswami Latest Speech : Tamil nadu | Chennai | current Chief Minister of Tamil Nadu | India | ADMK | Jayalalithaa

Edappadi Palaniswami Latest Speech :

சேலம்: தமிழகத்தை பொருத்தவரை இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நடந்து நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து 23ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இதேபோன்று தமிழகத்தில், திமுகவே அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி குறைவான இடங்களை மட்டுமே பிடிக்கும் எனவும், பல ஊடகங்கள் கருத்து கணிப்பில் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி கூறுகையில்,

“நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு ஆகும் என கூறினார்”..

விமானத்தில் திடீர் கோளாறு! அவசரமாக பாதியிலேயே திரும்பிய முதல்வர்

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது.

மேலும் 2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன்.

எனவே, 23 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்ட உடன் உண்மை தெரிந்துவிடும். மேலும் தமிழகத்தில் அதிமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் வெற்றிபெறும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.