விவசாயத்திற்கான திட்டங்களை அரசியல் ஆக்காதீர்கள் - ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதிலடி.!!

TN CM EPS Request to Political Parties : தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசியலாக்க வேண்டாம் என முக ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை, தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும், இவை விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்கள் என்றும், இவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும், இச்சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.9.2020 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இச்சட்டங்கள் வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும், உழவர் சந்தை திட்டத்திற்கும் எதிரானது என்றும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இதில் இல்லையென்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசால்,

(அ) விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச்சட்டம், 2020.

(ஆ) விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம், 2020

(இ) அத்தியவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020.

CM EPS Reply to Stalin
CM EPS Reply to Stalin

ஆகிய சட்டங்கள் 5.6.2020 அன்று அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு இச்சட்டங்கள் மக்களவையில் முன்மொழியப்பட்டு, கடந்த 15.9.2020 மற்றும் 17.9.2020 ஆகிய தேதிகளில் இச்சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தமிழக விவசாயிகளுக்கு நலன் பயக்கும் திட்டங்கள் எனவே இவற்றை அரசியலாக்க வேண்டாம் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கை விவரம்