Edappadi Palaniswami : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK,i is an Indian politician and the current Chief Minister of Tamil Nadu

Edappadi Palaniswami :

சென்னை: 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் சென்னை திரும்ப இருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 13 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.

அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர்.

முதற்கட்டமாக இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி இரவு லண்டனில் இருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுநாள் அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரச்சாரம்.!

இதற்கு அடுத்து, அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக துபாய் சென்றடைந்தார். மேலும் துபாய் விமான நிலையம் சென்றடைந்த முதல்வருக்கு துபாய் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் ஒரு சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பின்னர் துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் தனியே ஒரு கூட்டம் நடத்துகிறார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி 13 நாட்கள் சுற்று பயணத்தை முடித்து கொண்டு நாளை மறுநாள் (10 ஆம் தேதி)அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்ப இருக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.