Edappadi Palanisamy Latest Speech

எத்தனை புயல்கள் வந்தாலும் ஆடாமல், அசையாமல் இருக்கும் ஆலமரம் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்வராக இப்போ எல்லாம் ரூட்டும் கிளியர் என அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Edappadi Palanisamy Latest Speech : அ.தி.மு.கவையும் ஆட்சியையும் வெற்றிகரமாக வழி நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதையில் இருந்த தடைக்கற்கள் அனைத்தும் விலகி வெற்றிக்கான பாதை தெளிவாகியுள்ளது.

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றது முதல் பல்வேறு இக்கட்டான சூழல்களை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டிய அதே சமயத்தில் கட்சியையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொள்ள விடுக்கப்பட்ட சவாலை முறியடித்து அதில் வெற்றியும் பெற்றார் எடப்பாடி பழனிசாமி.

ஆட்சியை தக்க வைத்து கொண்ட அதே நேரம் கட்சி உடைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அடுத்த சவால் காத்துக் கிடந்தது. இந்த சவாலையும் சாதுர்யத்துடன் எதிர்கொண்ட எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை வியூகத்தை பயன்படுத்தி சாதித்து காட்டினார்.

இதன் மூலம் தன்னை ஒரு பழத்த அரசியல்வாதி என்று நீருபித்தார் எடப்பாடி பழனிசாமி. 3 மாதங்களில் விழும்,6 மாதங்களில் கவிழும் என்று கூறிய ஆட்சி, இப்போது வெற்றிகரமா தேர்தலையும் சந்திக்க உள்ளது.

ஐந்து ஆண்டு கால ஆட்சியின்போது, ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பை முறியடித்து மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா தொற்று உலகை அச்சுறுத்திய காலத்தில் ஊரடங்கை அமல்படுத்தி அனைத்து தரப்பு மக்களும் வியக்கும் வண்ணம் அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கினார். இது தவிர நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் பணம் வழங்கவும் உத்திரவிட்டார். மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டார். இதனால், கொரோனா ஊரடங்கை தனக்கு சாதகாமாக பயன்படுத்தி கொண்டார் என்று சொல்லும் அளவிற்கு சோதனையான காலத்தை சாதனையாக்கினார் எடப்பாடி பழனிசாமி.

அதேபோல், நிவர் மற்றும் புரெவி புயல்கள் சமயத்திலும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து ரஜினியின் அரசியல் வருகை அ.தி.மு.கவை பெரிதும் பாதிக்கும் என்று பேசப்பட்டது. அந்த இருள் தற்போது விலகிய நிலையில் சசிகலா வருகை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக அமையும் என்று பேசப்பட்டது. அதுவும் தற்போது விலகியுள்ளது, இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு வந்த அரசியல் ஆபத்துகளும் தானகவே விலகி செல்கிறது அவரது அதிஷ்டம் என்று கூறுகிறார்கள்.

கட்சி துவங்குவேன் என்று கூறிய ரஜினி காந்த், அரசியலுக்கு வரவில்லை என்று கூறி விட்டார் , உடன் இருந்த துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சமாளித்து, அவர் வாயாலே ஈ.பி.எஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க செய்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்து, அரசியல் பிரவேசம் செய்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆபத்து உண்டாக்குவார் என்று எண்ணிய சசிகலா, இப்போது அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார்‌.

கூட்டணியில் இருக்கும் பாஜகவும் எடப்படியின் முடிவையே இறுதி முடிவாக ஏற்கிறது, இவை இல்லாமல் எதிர்கட்சிகள் மத்தியிலும் கூட்டணி குழப்பங்கள் இருந்து வருகின்றன. இப்படி எல்லாமே எடப்பாடியாருக்கு சாதகமாக தான் இருக்கிறது.

சோதனைகளை சாதனையாக்கி ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை வெற்றி நடை போடும் அளவிற்கு உயர்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதையில் இருந்த தடைக்கற்கள் அனைத்தும் தானாக விலகி நிற்கிறது, இது ஈ.பி.எஸ்க்கு சாதகான சூழலை உருவாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.