Edappadi Palanisamy in Cyclone Gaja
Edappadi Palanisamy in Cyclone Gaja

Edappadi Palanisamy in Cyclone Gaja – சென்னை: “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு ரயில் மூலம் பயணம் செய்ய இருக்கிறார்”.

கடந்த 16- ஆம் தேதி வேதாரண்யம் மற்றும் நாகபட்டினம் இடையே கஜா புயல் கரையை கடந்தது.

120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கஜா புயல் கரையை கடந்தது.

இதன் காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது.

மரங்கள் அனைத்தும் சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கடந்த 20- ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், புதுக்கோட்டை, பட்டுகோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

முதல்வருடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் உடன் சென்றனர் .

அச்சமயம் மழை பெய்ததால் தன் பயணத்தை ரத்து செய்து முதல்வர் சென்னை திரும்பினார்.

இதன் பின்னர், டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து, புயல் பாதிப்பை எடுத்து கூறி நிவாரண நிதியாக 15,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் புயல் பாதித்த இடங்களில் விடுபட்ட பகுதிகளை விரைவில் பார்வையிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், இன்று காரைக்கால் விரைவு ரயில் மூலம் நாகை செல்ல உள்ளார்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாளை முதல் புயல் பாதித்த இடங்களான நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பார்வையிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்று புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய சென்றதை குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது முதல்வர் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.