Edappadi Palanisamy About MGR And Periyar

பெரியாரை பகுத்தறிவு பகலவன் எனவும் சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தவர் எம்ஜிஆர் எனவும் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

Edappadi Palanisamy About MGR And Periyar : தமிழகத்தின் இரு வரும் அரசியல் சக்திகளாக வலம் வந்தவர்கள் பெரியார் மற்றும் எம்ஜிஆர். இவர்கள் இருவருக்கும் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் பெரியார் மற்றும் எம்ஜிஆரின் செயல்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவர்கள் இருவரைப் பற்றியும் பதிவிட்டுள்ளார்.

முதலில் பெரியார் குறித்து அவர் பதிவிட்டதாவது, சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் குறித்து பதிவிட்டுள்ளதாவது, சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.