Edappadi Palanisamy : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Tamil nanu, Political , Political News

Edappadi Palanisamy :

சென்னை: சென்னையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அப்போது டெங்குவை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேட்டி அளித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன்- ஐ முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். பிறகு செய்தியாளர்களுக்கு இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்- ஐ சந்தித்த பின்னர் பேட்டியளித்த அவர் கூறியதாவது: ‘ தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை.

மேலும் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். தமிழிசையை தெலுங்கானா ஆளுநராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என தெரிவித்தார்.

பின்னர் டெங்கு காய்ச்சல் குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சல்: ஒரே நாளில் 5 பேர் பலி.!

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார். மேலும் காய்ச்சல் வந்தவுடன் சற்றும் தாமதிக்காமல், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் அரசின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மக்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவ்வாறு தண்ணீர் தேங்குவதால் தான் டெங்கு காய்ச்சல் போன்றவை உண்டாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய முதல்வர், மேகதாது விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசின் முயற்சியால் மேகதாதுவில் அணை கட்டும் முடிவுக்கு சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here