Edappadi Palanisamy Vs Stalin

மு.க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.

Edapadi Palanisamy Vs MK Stalin : தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளாக இருந்து வருபவை அதிமுக மற்றும் திமுக. இரண்டுமே திராவிட கட்சிகள்.

தொடர்ந்து பத்து வருடங்களாக ஆளும் கட்சியாக இருந்து வரும் அதிமுகவின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார்.

அதிமுகவில் அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி 2021 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

திமுகவின் முதல்வர் வேட்பாளராக மு க ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர்கள் இருவரில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

முதலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரைப் பற்றி பார்க்கலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

அதிமுக கட்சியில் சாதாரண தொண்டனாக இணைந்து தன்னுடைய செயல்களால் படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராக இடம் பிடித்துள்ளார்.

பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று சாதனை நாயகனாக வலம் வருகிறார்.

கடந்த 5 வருடத்தில் தமிழக மக்களுக்கு என்ன தேவை என்னென்ன திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதை நன்கு அறிந்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

திமுகவில் குடும்ப அரசியல் நடந்து வரும் நிலையில் அதிமுகவில் கட்சியை குடும்பம் என அரசியல் செய்து வருகிறார்.

அமைதியான மற்றும் அனைவரின் கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கும் முதல்வராக இருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் விரும்பும் ஒரு தலைவராக இடம்பிடித்துள்ளார்.

பணக்கார குடும்பத்தில் பிறந்து கஷ்டம் என்றால் என்ன என்பதே தெரியாமல் பல கோடிகளுக்கு அதிபதியாக வாழ்ந்து வருபவர்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வழியில் அரசியலில் நுழைந்தவர்.

அரசியலில் ஒரு கட்சியின் தலைவராக உயர்வதற்கு பெரிய உழைப்பு என எதுவும் இல்லை. தந்தை ( கருணாநிதி ) தலைவராக இருந்தார் அவருடைய மறைவுக்குப் பிறகு மகன் ( மு.க ஸ்டாலின் ) தலைவராக பதவியேற்றுள்ளார்.

முழுக்க முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்டு அரசியல் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இதுபோன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக ஸ்டாலின் இருவரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

இவர்கள் இருவரில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் முதல்வர் வேட்பாளராக யார் இருப்பார்கள் என்பதை நீங்களே கமெண்ட்டுகளில் சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.