Eating a Healthy Dinner
Eating a Healthy Dinner

Eating a Healthy Dinner :

🤫 நமது முன்னோர்கள் கூறும் சாப்பிடும் போது பேசக் கூடாது என்பதற்கு சாதாரண சில காரணங்கள் இருந்தாலும் விஞ்ஞானத்தில் அதற்கான அர்த்தங்கள் உள்ளது. சாப்பிடும்போது ஏன் பேசக்கூடாது

🤫 வாயிலிருந்து உணவுக்குழாய் ஆனது தொண்டை வழியாக வயிற்றுக்குள் போகிறது.

அதேபோல் மூக்கிலிருந்து சுவாச குழாய் தொண்டை வழியாக உணவுக்குழாயைக் கடந்து நுரையீரலுக்கு செல்கிறது.

🤫 நாம் சாப்பிடும் போது நம்முடைய சுவாசப்பாதை மூடிக்கொள்ளும். உணவு அதை கடந்து போனதும் மீண்டும் திறந்து கொள்ளும். இது ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகிறது.

🤫 இதற்காக கதவு போன்ற அமைப்பு இருக்கிறது. இதனால் உணவுக்குழாய்க்குள் காற்றோ, சுவாசக்குழாய்க்குள் உணவோ போய்விடாமல் தடுக்கப்படுகிறது.

ஆனால் நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறக்கும். சுவாசக்குழாய் திறந்தால்தான் பேசமுடியும்.

🤫 இப்படி திறக்கும்போது சுவாசக்குழாய்க்குள் உணவுப்பொருள் தவறாக நுழைந்துவிடும்.

அதை வெளியே தள்ளுவதற்காக சுவாசக்குழாய் வேகமான ஒரு விசையை உருவாக்கும். அதைத்தான் புரையேறுதல் என்கிறார்கள்.

🤫 எனவே நமது சுவாசக் குழாய்க்கும் உணவுக்குழாய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதால் தான் புரையேறுதல் ஏற்படும்.

இது சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்பதால் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here