Easy Treatment For Skin Problems
Easy Treatment For Skin Problems

Skin Problem Treatments : தோலில் அரிப்பா? தோலில் நமைச்சலா ?அனைத்து பிரச்சினையிலிருந்து விடுபட இதோ எளிமையான மருத்துவ குறிப்புகள்:

1. சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படி தடுக்க முடியவில்லை எனில் தேங்காய் எண்ணை கலந்த சோப்பு பயன்படுத்தலாம்.

2. தினமும் குளிக்கும் போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள் தூள் ,கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.

3. குப்பை மேனி செடியின் பயன்கள்:

தினமும் குளிப்பதற்கு முன் குப்பைமேனி இலைகளை அரைத்து பத்து நிமிடம் ஊறிய பின், குளித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள சொறி ,சிரங்கு, அரிப்பு நாளடைவில் நீங்கும்.

4. அறுகம்புல்லுடன், மஞ்சள்

சேர்த்து தேமல் ,தடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து குளித்தால் நல்ல பலன் தரும்.

5. குழந்தைகளுக்கு கைகளிலும் ,கால்களிலும் சிறு, சிறு வேர்க்குரு போன்ற தவளை சொறி மற்றும் படைகள் காணப்படும். அதற்கு புல்லின் மேலுள்ள நீரை பஞ்சால் ஒற்றி ,தேய்க்கலாம்.

6. ஆவாரம் இலையை நீர்விட்டு அரைத்து, சிரங்கு உள்ள பகுதியில் பூசிவர நாளடைவில் குணமாகும்.

7. கார்போக அரிசி, பாசிப்பயறு இரண்டையும் அரைத்து உடலில் தேய்த்து குளிப்பதனால் தோல்நோய் வருவதை தவிர்க்கலாம்.

8. கார்போக அரிசி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும் .பாசிப்பயிறு உடல் நிறத்தை கூட்டும்.

9. வேப்பிலை ,கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் அரைத்து தினமும் தேய்த்துக் குளிக்க தோலின் நிறம் கூடும். வேப்பிலை ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது .

10. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த,வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களையும் ,காய்களையும் உணவில் சேர்த்துக் கொண்டால் ,தோலில் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நம்மை அண்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here