Easy Steps for Black Hair
Easy Steps for Black Hair

Easy Steps for Black Hair :

உங்களுக்கு தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா? வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி உங்கள் முடியை கருமையாக மாற்ற இதோ எளிமையான டிப்ஸ்!

1. விளக்கெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் .விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் ,தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், இவற்றை ஒன்றாகக் கலந்து தலை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை தொடர்ந்து செய்தால் உங்களது முடி கருமையாகவும் ,அடர்த்தியாகவும் வளரும்.

2. தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தி பூ ,ஆலமரத்தின் இளம்வேர் இவற்றை ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து வர முடி கருமையாக வளரும்.

3. தேங்காய் எண்ணையுடன் கருவேப்பிலையை காய வைத்து பொடி செய்து நன்றாக கலந்து ,தலையில் இளஞ்சூட்டோடு தேய்த்து வந்தால் முடி கருமையாக வளரும்.

4. தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தி பூவை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தேய்த்துவர, முடியின் நிறம் மாறி கருமையாக வளரும்.

5. நெல்லிக்காய் வைட்டமின் சி மிகுந்தது. தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய்ச் சாறு அல்லது நெல்லிக்காய் எண்ணெய் கலந்து தலையில் மசாஜ் செய்து வந்தால் முடியின் நிறம் விரைவில் கருமை நிறமடையும். வாரத்தில் இரண்டு நாட்கள் மேற்கொண்டால் போதுமானது.

6. அஸ்வகந்தா அதிக சக்தி வாய்ந்த மூலிகை ஆகும். அஸ்வகந்தா பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால், முடி நிறம் தருவதோடு ஆரோக்கியமாகவும் வளரும்.

7. கேரட்டில் கரோட்டினாய்டுகள் சக்தி அதிகமாக உள்ளது. நாம் அடிக்கடி உணவில் கேரட் ஜூஸை சேர்த்துக் கொள்வதால் முடியின் நிறம் கருமையாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here