Ear Cleaning With Buds
Ear Cleaning With Buds

Ear Cleaning With Buds: பட்ஸ் வைத்து காது குடையும் பழக்கம் ஆபத்தானதா? அறிந்து கொள்ளுங்கள்..

☆ ஊக்கு, ஹேர்-பின், தீக்குச்சி, பென்சில், பட்ஸ், பைக் சாவி என எது கையில் கிடைத்தாலும், அதை காதுக்குள்விட்டுக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. இவை ஆபத்தான பழக்கங்கள்.

☆ காதில் அழுக்கை நீக்குவதுதான் சுகாதாரம் என்று நினைப்பதும், காது குடைவதால் சுகமாக இருப்பதும்தான்.
இதற்கு காரணமாகும்.

☆ பட்ஸை வைத்துக் காதை குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும்.

☆ அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்குத் தள்ளிவிடுவதுதான் நடக்கும். அப்போது செவிப்பறை பாதிக்கப்படும்.

☆ தவறுதலாகச் செவிப்பறையில் `பட்ஸ்’ பட்டு கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸைக் கொண்டு காது குடைவதைத் தவிர்ப்பதே நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here