E- Chiranjeevi Scheme in TN
E- Chiranjeevi Scheme in TN

தமிழகத்தில் இ சிரஞ்சீவி திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது குறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

E- Chiranjeevi Scheme in TN : தமிழகத்தில் பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் புறநோயாளிகள் வீட்டிலிருந்தே டாக்டர்களிடம் விடியோகால் மூலமாக ஆலோசனை பெற இ – சிரஞ்சீவி என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் மக்கள் இதன் மூலமாக ஆலோசனையைப் பெறலாம். மேலும் டாக்டர்கள் அவர்களுக்கு உரிய மருந்து சீட்டினை அவர்களின் மொபைல் நம்பருக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.

இந்த மருந்து சீட்டை வைத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மருந்தகம் அல்லது தனியார் மருந்தகங்களில் தேவையான மருந்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 6,471 பேர் பயனடைந்துள்ளதாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 617 அரசு மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக அரசு சிறப்பு மருத்துவர்களும் உயர் சிறப்பு மருத்துவர்களும் இந்த திட்டத்தில் பணி அமர்த்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி திட்டத்தின் மூலமாக அதிகமான டாக்டர்களை கொண்டு அதிகமான மக்களுக்கு ஆலோசனை வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.