துல்கர் சல்மான் நடித்துள்ள “சீதாராமன்” திரைப்படத்தின் “டீசர்” இணையத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே படத்திற்கான  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி அவர்களின் மகன் தான் துல்கர் சல்மான். பிரபல மலையாள நடிகரான இவர் தமிழில் “வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி”, போன்ற  படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஹே சினாமிக்கா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்துஇவர் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சீதா ராமம்’.

எதிர்பார்ப்பை எகிறவைத்த துல்கர் சல்மானின் "சீதா ராமன் படத்தின் டீஸர்" - வீடியோ இதோ.!!

இதில் இவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களாக ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு மலையாளம், என பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பை எகிறவைத்த துல்கர் சல்மானின் "சீதா ராமன் படத்தின் டீஸர்" - வீடியோ இதோ.!!

ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான “டீசரை” படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர்இணையத்தில் வைரலாவது மட்டுமின்றி ரசிகர்களின் இடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Sita Ramam Teaser - Tamil | Dulquer Salmaan | Mrunal Thakur | Rashmika | Sumanth | Hanu Raghavapudi