Dubmesh Mrinalini

DubMash Mrinalini : தியாகராஜா குமாரராஜா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

அமித் பார்கவ் வீட்டில் நடந்த விசேஷம், குவியும் வாழ்த்துக்கள் – புகைப்படங்கள் இதோ.!

தைரியமான கதை, வித்தியாசமான திரைக்கதை என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இப்படத்தில் நடித்த நடிகை மிருனாளினி இப்படம் குறித்த சர்ச்சையான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

டப்மாஷ் மூலம் பிரபலமான இவர் வெள்ளித் திரையில் அறிமுகமாகும் படம் இதுதான். ஆனால் இப்படத்தில் அவர் ஐந்து நிமிடம் மட்டுமே வருவார்.

இதனால் இவரை ரசிகர்கள் கேலி பேசி வரும் நிலையில் “ சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனது கதாப்பாத்திரம் பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள். அடுத்த படத்தில் எனது பணியை சிறப்பாக செய்வேன்” என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.