Dubai Crown Prince Sheikh Hamdans : துபாயின் இளவரசனாக திகழும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இவர் ஃபாஸ்ஸா என்று பிரபலமாக அழைக்கப்படுவார்.

இவர் பொதுவாகவே விலங்குகளிடமும் பறவைகள் இடமும் நெருங்கிப் பழகும் குணம் உடையவர். இவர் தனது சிறு வயதிலிருந்தே கழுகு ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார்.

ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழர்களை மீட்ட பிரபல பாலிவுட் நடிகர்??

அதுமட்டுமல்லாமல் இவர் ஆந்தை மான் ஒட்டகம் போன்ற செல்லப் பிராணிகளுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதனால்தானோ என்னமோ, ஒரு குருவி தனது காரின் முன்பகுதியில் கூடு கட்டி இருப்பதை பார்த்த இளவரசர், அந்த காரை மீண்டும் எடுத்து உபயோகிக்காமல் அந்தக் குருவியை தொந்தரவு செய்யாமல் காரையே பரிசளித்துள்ளார்.

முல்லைக்கு தேரை பரிசாக அளித்த பாரி என்ற மன்னன் பிற்காலத்தில்” பாரிவள்ளல்” என்று பெயர் பெற்றார்.

அதேபோல் இளவரசர் ஃபாஸ்ஸா, குருவிகாக தனது காரை பரிசளித்தால் அவரும் “ஃபாஸ்ஸாவள்ளல்” தானே! இவருடைய இந்த செயலுக்கு பலதரப்பிலும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படமானது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.