பொன்னியன் செல்வன் படத்தில் இருந்து நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தின் புகைப்படம் ட்ரம்ஸ் சிவமணி அவர்கள் வெளியிட்ட வீடியோவில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்ட படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான மணிரத்தினம் அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார். வரலாற்றுப் படமான இந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பெரிய அளவில் உருவாக்கி வருகின்றனர். 

"பொன்னியன் செல்வன்" படத்திலிருந்து கார்த்தியின் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் டிரம்ஸ் சிவமணி - வைரலாகும் வீடியோ.

இரண்டு பாகங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் “முதல் பாகம்” வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் “இரண்டாம் பாகம்” அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"பொன்னியன் செல்வன்" படத்திலிருந்து கார்த்தியின் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் டிரம்ஸ் சிவமணி - வைரலாகும் வீடியோ.

இந்நிலையில் இப்படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களின் புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் தற்போது படத்திற்கான “ரீ ரெக்கார்டிங்” பணி தொடங்கியுள்ளதை குறித்து டிரம்ஸ் மாஸ்டர் சிவமணி வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்றில் முதல் முறையாக நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

"பொன்னியன் செல்வன்" படத்திலிருந்து கார்த்தியின் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் டிரம்ஸ் சிவமணி - வைரலாகும் வீடியோ.