Drinking Tea Tips
Drinking Tea Tips

Drinking Tea Tips

அதிக சூட்டுடன் தேநீர் குடிப்பவரா நீங்கள்?. புற்றுநோய் ஆபத்தா? உஷார்!!!

🍵☕ ஒருநாளின் ஆரம்பமே நம்மில் பலருக்கு தேநீரோடுதான் ஆரம்பிக்கிறது. சூடாக தேநீர் அருந்துவதால் உணவுக்குழல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம்.

வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ பெரும்பாலானவர்கள் சூடாக தேநீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

🍵☕ நமது வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது. அதிகமான சூட்டுடன் தேனீரோ, கபியோ அருந்துவதால் உணவுக்குழாயின் சுவர் பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமடைகின்றன. இதனால் புற்றுநோய் கட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

🍵☕ 60 டிகிரி வெப்பத்திற்கு மேல் சூடாக தேநீர் அருந்துவதாலும், நாள் ஒன்றுக்கு 700 மி. லீ தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவிகித அளவிற்கு புற்றுநோய் தாக்கும் என கூறப்படுகிறது.

🍵☕ அமெரிக்க புற்றுநோய் சங்கம் 50000ற்கு மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், சூடாக தேநீர் அருந்துவதால் 317 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

🍵☕ புகையிலையால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதில்லை, புத்துணர்வுக்காக அருந்தும் தேநீராலும் கூட புற்றுநோய் ஏற்படும் என்பதினாலும், அதிக சூடு இல்லாத தேநீர் அருந்தினால் இத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here