Draupathi Director Next Title
திரௌபதி இயக்குனரின் அடுத்த படம் பற்றிய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Draupathi Director Next Movie Title  : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலமாக இயக்குனரானவர், இவர் இறுதியாக இயக்கி இருந்த திரௌபதி திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு ஆளானது.

ஒரு தரப்பு சமூகத்திற்கு தேவையான படம் என்று பாராட்டினாலும் இன்னொரு தரப்பு இந்த படத்தை சாதி வெறியை தூண்டுவதாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் #திரெளபதி ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மோகன் ஜியின் அடுத்த படமும் கடவுளின் பெயரில் தான் உருவாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்திலும் ரிச்சர்ட் தான் நாயகனாக நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.