ரசிகர்கள் குறித்து கேட்ட கேள்விக்கு விக்ரம் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் படம் வெளியாக உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்திலும் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பார்வதி போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். 15 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு ரசிகர்கள் இல்லையா? என்ற கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த விக்ரம், என் ரசிகர் பட்டாலும் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. திரையரங்கில் வந்து பாருங்கள், எல்லா ரசிகர்களும் என் ரசிகர்கள் தான் என்று கூறியுள்ளார். நானும் கமர்சியல் படங்களை கொடுத்தவன் தான் எனக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்று பேசி உள்ளார்.
விக்ரமின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.