Don't Eat This Food Combo
Don't Eat This Food Combo

Don’t Eat This Food Combo :

எந்தெந்த உணவு பொருள்களை கலந்து உண்பதை தவிர்க்க வேண்டும்?

1. ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் நெய். இரண்டையும் சேர்த்து உண்பது தவறு. அதாவது சம அளவுள்ள தேனும் நெய்யும் சேர்ந்தால் அது விஷம். தேவைப்படும்போது, கொஞ்சம் அதிகமாக தேன், குறைவாக நெய் அல்லது கொஞ்சம் குறைவாக தேன், அதிகமாக நெய் எனக் கலந்து சாப்பிட வேண்டும்.

2. சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் கலப்பது தவறு. உதாரணமாக சமைத்த சாதத்துடன் சாலட் சேர்த்துச் சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு உண்டாகும்.

3. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

4. பால், யோகர்ட், வெள்ளரி, தக்காளி இவற்றோடு எலுமிச்சையைச் சேர்த்துச் சாப்பிடுவது தவறான பழக்கம். இது அசிடிட்டிக்கு வழிவகுத்து, வயிற்றுப் பிரச்னையை உண்டாக்கிவிடும்.

5. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

6. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

7. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

8. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

9. இறைச்சியோடு தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளைச் சேர்த்துச் சாப்பிடுவது தவறு. ஏனென்றால், அதன் காரணமாக அஜீரணம், குமட்டல், வாந்தி, படபடப்பு ஆகியவையும் உண்டாகலாம்.

10. பர்கருடன், பிரெஞ்சு ப்ரைஸை உட்கொள்ளும் போது, உருளைக்கிழங்கு பிரெஞ்சு ப்ரைஸில் உள்ள சர்க்கரை, சைட்டோகீன்களை உருவாக்கி, உடலினுள் காயங்களை ஏற்படுத்தி, முதுமைத்தோற்றத்தை வேகமாக்கும். எனவே இந்த உணவுச்சேர்க்கையை மட்டுமின்றி, இவைகளை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்.

11. முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் இவற்றால் தயாரான உணவுகளைச் சாப்பிட்ட பிறகு பாலைக் குடிக்கவே கூடாது. அது மிக மோசமான தோல் வியாதிகளுக்கு வழிவகுத்துவிடும்.

12. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

2. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும். உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

3. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,சேர்த்துக்கொள்ளக்கூடாது.

4. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

5. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

6. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

7. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here