Donald Trump Tweet
Donald Trump Tweet

Donald Trump Tweet – மும்பை: கடந்த 2008 – ஆம் ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் மும்பை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் 4நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள், காவல் துறையினர் உட்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் 10- ஆண்டு நினைவு தினமான இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மும்பை தாக்குதலை நினைவு கூர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில், “மும்பை தாக்குதலின் 10- ஆண்டு நினைவு தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் பாதிக்கபட்ட அனைத்து இந்திய மக்களுக்கும் உரிய நீதி கிடைக்க அமெரிக்கா இந்திய மக்களுக்கு துணை நிற்கும்.

மேலும் இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம், வெற்றிக்கு அருகில் கூட வரவிட மாட்டோம்” இவ்வாறு ஆக்ரோஷமாக டிவிட் செய்துள்ளார்.