சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படம் பற்றி அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Don Movie Update : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சிபிச் சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டான் என்ற படத்தில் நடித்துள்ளார். டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் தான் நடித்து வருகிறார். அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara

விரைவில் டான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.